search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து துறை"

    • 2016-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போடப்பட்ட துரோக ஒப்பந்தத்தினால் 7 ஆண்டுகள் தொழிலாளர்கள் ஊதிய இழப்பை சந்தித்து வந்தார்கள்.
    • கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும்போது ஊதிய இழப்பு, சர்வீஸ் குறைப்பு உள்ளிட்ட தண்டனைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்

    சென்னை:

    ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் 99 சதவீதம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றும், தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது என்றும் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் மகிழ்ச்சி தெரிவித்தார்.

    சென்னை குரோம் பேட்டையில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் அரசு நடத்திய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது:-

    2016-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போடப்பட்ட துரோக ஒப்பந்தத்தினால் 7 ஆண்டுகள் தொழிலாளர்கள் ஊதிய இழப்பை சந்தித்து வந்தார்கள். அந்த ஊதிய இழப்பை சரிகட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். அந்த கோரிக்கையை ஏற்று, அனைவருக்கும் 2016-ம் ஆண்டில் வழங்கப்பட்ட அந்த அநீதி நீக்கப்பட்டு நியாயம் கிடைத்துள்ளது. 1.9.2019 முதல் அதனை சரிசெய்ததற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    அதற்கு அடுத்தபடியாக 5 சதவீத ஊதிய உயர்வு 1.9.19 முதல் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும்போது ஊதிய இழப்பு, சர்வீஸ் குறைப்பு உள்ளிட்ட தண்டனைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவை அனைத்தையும் சரிசெய்து, அவர்களுக்கு சீனியாரிட்டி கொடுத்து பதவி உயர்வு வழங்குவதாக கூறியிருக்கிறார்கள். மகளிர் பஸ்களில் பணிபுரியும் டிரைவர்கள்-கண்டக்டர்களுக்கு பிக்சட் பேட்டாவை நாள் ஒன்றுக்கு ரூ.2 உயர்த்தி தருவதாக கூறியிருக்கிறார்கள். பல்வேறு போக்குவரத்து கழகங்களில் பல்வேறு தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த தண்டனைகளுக்கு சீரான முடிவை காண பொதுவான நிலை ஆணை கேட்டிருந்தோம். அதனை நிறைவேற்றி தர ஒரு குழு அமைத்து, அதற்கான அரசாணையும் பிறப்பித்திருக்கிறார்கள்.

    தொழிலாளர்களின் எண்ணிக்கையை மீண்டும் 7.5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று ஒரு குழு அமைத்து விரைவில் செய்து தருவதாக கூறியிருக்கிறார்கள். தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் 1.4.13-க்கு பிறகு வேலைக்கு வந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடையாது, புதிய ஓய்வூதியம் தான் என்று சொன்னதை மாற்றி அமைக்க ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுவை விரைந்து முடித்து, அதற்குரிய பரிகாரங்களை செய்வதாக கூறியிருக்கிறார்கள்.

    3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் என்ற நடைமுறையை மாற்றக்கூடாது என்று கேட்டிருக்கிறோம். ஓய்வுபெற்றுள்ள தொழிலாளர்களுக்கு 2015-ம் ஆண்டு முதல் பஞ்சப்படி வழங்கவேண்டும் என்றும் கேட்டிருக்கிறோம். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஏறக்குறைய 99 சதவீதம் முன்னேற்றத்தை கண்டிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தொழிலாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் பங்கு பெறாமல் வழக்கம் போல பணிக்கு தவறாமல் வர வேண்டும்.
    • பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இவர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019-ம் ஆண்டு அமல் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும், அரசுக்கும் உடன்பாடு ஏற்படாததால் அதில் இழுபறி ஏற்பட்டு வந்தது.

    இதற்கிடையே ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வு கால பலன்கள், மருத்துவ காப்பீடு போன்றவற்றை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் போக்குவரத்து தொழிலாளர்கள் கூறி வருகிறார்கள். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 325 பணிமனைகளிலும் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    தொழிலாளர்களின் ரூ.12 ஆயிரம் கோடியை செலவு செய்து விட்டனர். 7 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு தரவில்லை என்ற மனக்குறையும் போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் உள்ளது. 6 தடவை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் முழு உடன்பாடு ஏற்படாவிட்டால் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    போக்குவரத்து கழக தொழிலாளர்களின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கமானது (சி.ஐ.டி.யு.) 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றிட கோரி 22 அம்ச கோரிக்கைகளை குறிப்பிட்டு அதனை நிறைவேற்றிட வேண்டி இன்றோ (3-ந்தேதி) அல்லது அதற்கு பின் எந்தவொரு நாளிலோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நம்முடைய மாநகர் போக்குவரத்துக் கழகமானது, சென்னை பெருநகரம் மற்றும் புறநகர் மாவட்ட பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பெருமளவில் ஈடு செய்கின்ற முதன்மையான சேவை நிறுவனமாகும்.

    எந்தவித லாப நோக்கமின்றி, அனைத்து நாட்களிலும் தனது சேவையினை தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஒரு பொறுப்புள்ள நிறுவனம். இதனை தொழிலாளர்கள் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றாகும்.

    எனவே, தொழிலாளர்கள் அனைவரும் எதிர்வரும் 3.8.2022 (இன்றோ) அல்லது அதற்கு பின் எந்தவொரு நாளிலோ நடைபெற உள்ளதாக அறிவித்துள்ள வேலைநிறுத்தப்போராட்டத்தில் பங்கு பெறாமல் வழக்கம் போல பணிக்குத் தவறாமல் வர வேண்டுமென இதன் வாயிலாக அறிவுறுத்தப்படுகிறது.

    இன்று (3-ந்தேதி) அல்லது அதற்கு பின் எந்தவொரு நாளில் வேலைநிறுத்தம் செய்கிறார்களோ, அந்நாளில் வழங்கப்பட்ட விடுப்புகள் யாவும் இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது. வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

    இன்று (3-ந்தேதி) அல்லது அதற்கு பின் எந்தவொரு நாளிலோ நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது நிலையாணை விதிகளின்படி, சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    • 66 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    தாம்பரம்:

    சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி முகாமில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 14 -வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    ஏற்கனவே 4 கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் இன்று 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 66 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் டாக்டர் கோபால், நிதிதுறை கூடுதல் செயலாளார் அருண் சுந்தர் தயாளன் ஐ.ஏ.எஸ். தொழிலாலர் நலத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் ஆகியோர் மற்றும் அதிகாரிகள் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர்.

    தொ.மு.ச. நிர்வாகிகள் சண்முகம் நடராஜன், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் சூரியமூர்த்தி பழனி, சி.ஐ.டி.யு. சார்பில் ஆறுமுக நைனார் சவுந்தரராஜன் எம்.எல்.எப். சார்பில் வெங்கடேசன் ஏ.எல்.எல்.எப். சார்பில் அர்ஜூனன் உட்பட பல்வேறு சங்கங்கள் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது.
    • குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம்.

    13-வது ஊதிய ஒப்பந்தம் 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதியுடன் நிறைவடைந்தது. 14-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படாமல் இதுவரையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 வருடமாக புதிய ஒப்பந்தம் போடுவது தள்ளிப்போனது.

    இந்த நிலையில் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2-வது கட்ட பேச்சுவார்த்தை பிப்ரவரி மாதம் நடந்தது. அப்போது தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதன் பின்னர் 3-வது கட்ட ஊதிய பேச்சுவார்த்தை அப்போதைய அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமையில் நடந்தது. அதனைத்தொடர்ந்து ஏப்ரல் மாதம் 4-வது கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்தது.

    அப்போது தொழிலாளர்கள் சார்பில் வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. சம்பள உயர்வு மட்டும் இறுதி செய்யப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. 5 சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். அதனை முறையாக அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொழிற்சங்கம் சார்பில் வைக்கப்பட்டன.

    இந்த நிலையில் பஸ் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் 11-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடக்கிறது.

    இதில் போக்குவரத்து துறை செயலாளர் கோபால் மற்றும் அனைத்து மேலாண்மை இயக்குனர்கள் கலந்து கொள்கிறார்கள். 65 தொழிற்சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள்.

    இதில் ஊதிய உயர்வு குறித்து இறுதியாக விவாதிக்கப்படும் என தெரிகிறது. தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அதனை முறைப்படுத்தி வழங்க முன்வருவதாகவும் கூறப்படுகிறது.

    அதனால் 1.25 லட்சம் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு இறுதி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    • கலெக்டர் உத்தரவால் நடவடிக்கை
    • 131 வாகனங்கள் ேசாதனை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட பள்ளி வாகனங்களை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் ஆய்வு செய்யும் பணிகள் நேற்று நடைபெற்றது.

    இந்த ஆய்வின் போது போக்குவரத்து துறையின் வேலூர் துணை போக்குவரத்து ஆணையர் எம்.எஸ்.இளங்கோவன், வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர்.செந்தில்வேலன், குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குடியாத்தம் கே.கருணாநிதி, வேலூர் எஸ்.சக்திவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் குடியாத்தம், பேர்ணாம்பட்டு, பரதராமி, கே.வி.குப்பம், லத்தேரி, பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 131 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.

    ×